காளையார்கோவில் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காளையார்கோவில் வட்டம் (Kalaiyarkoil Taluk) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் தலைமையகமாக காளையார்கோவில் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் காளையார்கோயில், மறவமங்களம், நாட்டரசன்கோட்டை, மல்லல், சிலுக்கப்பட்டி என 5 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும்.[1] இவ்வட்டத்தில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

அமைவிடம்[தொகு]

காளையார்கோவில் சிவகங்கை நகரத்திற்கு கிழக்கே 18 கிமீ தொலைவில் தாெண்டி செல்லும் வழியில் உள்ளது.

காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு மேற்கில் சிவகங்கை வட்டம், கிழக்கில் தேவகோட்டை வட்டம், வடக்கில் காரைக்குடி வட்டம் மற்றும் தெற்கில் இளையான்குடி வட்டம் எல்லைகளாக உள்ளது.

காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு அருகில் அமைந்த நகரங்கள் சிவகங்கை, மதுரை மற்றும் காரைக்குடி ஆகும்.

காளையார்காேவில் தாலுகா, சிவகங்கை மாவட்டத்தில், பரப்பளவில் மிக பெரிய வட்டமாகும். இதன் பரப்பு 40 சதுர கிலாே மீட்டருக்குமேல் விரிந்துள்ளது.

கோயில்கள்[தொகு]

அரசியல்[தொகு]

காளையார் கோவில் வட்டம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வங்கி நிறுவனங்கள்[தொகு]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • இருதயா கலைக் கல்லூரி, காளையார்கோவில்
  • டாக்டர். ஆர். ஆர். கலை அறிவியல் கல்லூரி, காளையார் கோயில்
  • செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காளையார் கோயில்
  • கிருஷ்ணா நந்தா வித்யாஸ்ரம் மேனிலைப்பள்ளி, காளையார்காேவில் .
  • மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிலையம் காளையார்காேவில்...
  • சரஸ்வதி விகாஸ் மெட்ரிக்
  • மேல்நிலைப் பள்ளி காளையார் காேவில்
  • சுதந்திரா பாலிடெனிக் கல்லூரி, காளையார் காேவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  2. அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]