மானாமதுரை
மானாமதுரை நகராட்சி | |||||
அமைவிடம் | 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°Eஆள்கூறுகள்: 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சிவகங்கை | ||||
வட்டம் | மானாமதுரை வட்டம் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
50,257 (2021[update]) • 3,723/km2 (9,643/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi) • 90 மீட்டர்கள் (300 ft) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.tnmunicipality.in/manamadurai |
மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இது சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 12,032 வீடுகளும், 50,257 மக்கள்தொகையும் கொண்டது.[5]
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரைக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
2021-இல் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்[தொகு]
மானாமதுரை பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று மானாமதுரை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[7][8]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் சிறப்பு[தொகு]
இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[10][11][12] சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[13]
போக்குவரத்து[தொகு]
பேருந்து[தொகு]
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளதுர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து[தொகு]
ரயில்கள்[தொகு]
1.ராமேசுவரம் -சென்னை எழும்பூர் விரைவு ரயில்(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர்)
2. சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரயில்(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் →திருச்சி)
3.ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் (சேது விரைவு வண்டி)(வழி: விழுப்புரம், அரியலூர்,ஶ்ரீரங்கம் →திருச்சி)
4. சென்னை எழும்பூர்-செங்கோட்டை(சிலம்பு விரைவுத் தொடருந்து)
5.கன்னியாகுமரி-புதுச்சேரி(PONDY EXPRESS)
6.திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில்-வேளாங்கண்ணி(TVC VLNK link Express)
7.கோயம்புத்தூர்-திருப்பதி-ராமேஸ்வரம்-மதுரை-கோயம்புத்தூர் (Round trip)(Intercity Exp.)(Manamadurai Express/TPTY-RMM SF express)
8.பைசபாத்-இராமேஸ்வரம்(ஷ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ்)
9.புவனேசுவரம்-ராமேஸ்வரம் விரைவு தொடருந்து
10.ஓகா-ராமேஸ்வரம்
11.வாரணாசி(பனாரஸ்) - ராமேஸ்வரம் விரைவு தொடருந்து போன்ற ரயில்கள் மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.
மருத்துவமனைகள்[தொகு]
- தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
- அரசு மருத்துவமனை
கல்வி நிறுவனங்கள்[தொகு]
- ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
- அமிர்தா செவிலியர் கல்லூரி
- மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி
- ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி
- குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி
- குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
- புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- சூரிய நாராயண சாஸ்திரியார் ஆரம்ப பள்ளி
பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்[தொகு]
- ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்
- வீர அழகர் கோயில்
- பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
- தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
- திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
- பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ மானாமதுரை சந்திப்பு
- ↑ Manamadurai city Population Census 2011
- ↑ மானாமதுரை நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ "Manamadurai". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மானாமதுரை மட்பாண்டம்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
- ↑ http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
- ↑ மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது