உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்

ஆள்கூறுகள்: 9°52′N 78°34′E / 9.87°N 78.57°E / 9.87; 78.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாத்தாள் கோயில்
கண்ணாத்தாள் கோயில் is located in தமிழ் நாடு
கண்ணாத்தாள் கோயில்
கண்ணாத்தாள் கோயில்
ஆள்கூறுகள்:9°52′N 78°34′E / 9.87°N 78.57°E / 9.87; 78.57
பெயர்
வேறு பெயர்(கள்):கண்ணுடையநாயகி அம்மன்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவு:நாட்டரசன்கோட்டை
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசித் திருவிழா, களியாட்டத் திருவிழா

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.[1]


அம்மனின் சிறப்பு

[தொகு]
  • பரம்பரை பரம்பரையாக பாரசைவர்களாள் அம்பாளுக்கு பூஜா கைங்கர்யம் செய்யப்படுகிறது.
  • கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.[2]
  • மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.[3]
  • கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கல்லங்குடியில் கம்பர்!". தினமணி (19 ஆகத்து 2013)
  2. "கண் பார்வைத் தரும் கண்ணாத்தாள்". தினமணி (06 சூன் 2013)
  3. "அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு". தினமலர்