சின்ன அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்ன அண்ணாமலை (Chinna Annamalai, ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1].[2]

சின்ன அண்ணாமலை
தனிநபர் தகவல்
பிறப்பு நாகப்பன்
ஜூன் 18,1920
ஓ.சிறுவயல், சிவகங்கை மாவட்டம். தமிழ் நாடு
இறப்பு ஜூன் 18,1980
தேவகோட்டை
பெற்றோர் நாச்சியப்ப செட்டியார் - மீனாட்சி ஆச்சி
இருப்பிடம் கோவிலூரார் வீடு, தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தமிழ் நாடு
பணி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்.

பெயர் காரணம்[தொகு]

1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

வாழ்க்கை வரலாறு[தொகு]

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். திருவாடானை சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். சிவாஜி கணேசனின் தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் இறந்தார்.[6]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  1. கண்டறியாதன கண்டேன்
  2. கதைக்குள்ளே கதை
  3. சர்க்கரைப் பந்தல்
  4. சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
  5. சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
  6. சுவை நானூறு
  7. சொன்னால் நம்ப மாட்டீர்கள் (தன் வரலாறு)
  8. தலையெழுத்து
  9. ராஜாஜி உவமைகள்[7]

வெளியிட்ட நூல்கள்[தொகு]

சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. பாரதி பிறந்தார், கல்கி
  2. வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
  3. அவளும் அவனும் - வெ. ராமலிங்கன்; 1944.
  4. சத்தியமூர்த்தி பேசுகிறார், எஸ். சத்தியமூர்த்தி; 1945 மார்ச் 28.
  5. நாளை உலகம் - தியாகி இராம. சடகோபன்

வெளியிட்ட இதழ்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "அரசியல் தலைவர், பதிப்பக அதிபர் சின்ன அண்ணாமலை தயாரித்த திரைப்படங்கள்". மாலை மலர். 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "60 ஆண்டு வாழ்க்கையில் 50 ஆண்டுகளை அர்ப்பணம் செய்த சின்ன அண்ணாமலை". தினமலர். 20 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.maalaimalar.com/2010/04/23074343/annamalai.html பரணிடப்பட்டது 2010-05-11 at the வந்தவழி இயந்திரம் மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம்
  4. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  5. "இந்த வாரம் கலாரசிகன்". தினமணி. 20 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23
  7. "au:சின்ன அண்ணாமலை". Namakkal District Central Library. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  8. "நூல் வெளி: 'தமிழ் ஹரிஜன்' தீண்டாமைக்கு எதிரான குரல்". Hindu Tamil Thisai. 2023-02-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_அண்ணாமலை&oldid=3656372" இருந்து மீள்விக்கப்பட்டது