பத்மனாபபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மனாபபுரம்
பத்மனாபபுரம்
இருப்பிடம்: பத்மனாபபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°14′N 77°20′E / 8.23°N 77.33°E / 8.23; 77.33ஆள்கூற்று: 8°14′N 77°20′E / 8.23°N 77.33°E / 8.23; 77.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.
நகராட்சி தலைவர் சத்யதேவி
மக்கள் தொகை 20,051 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


15 metres (49 ft)

பத்மனாபபுரம் (ஆங்கிலம்:Padmanabhapuram പദ്മനാഭപുരം), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

வரலாறு[தொகு]

பத்மநாப புரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°14′N 77°20′E / 8.23°N 77.33°E / 8.23; 77.33 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பத்மனாபபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்மனாபபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலா[தொகு]

திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாபபுரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "Padmanabhapuram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மனாபபுரம்&oldid=2657553" இருந்து மீள்விக்கப்பட்டது