மாம்பழத்துறையாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாம்பழத்துறையாறு அணை
மாம்பழத்துறையாறு அணை is located in தமிழ் நாடு
மாம்பழத்துறையாறு அணை
Location of மாம்பழத்துறையாறு அணை in தமிழ் நாடு
அதிகாரபூர்வ பெயர்மாம்பழத்துறையாறு நீர்தேக்கம்
அமைவிடம்வில்லுக்குறி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
திறந்தது2010
அணையும் வழிகாலும்
வகைநீர்தேக்கம்


மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. தமிழக அரசால் 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. [1]

மாம்பழத்துறையாறு அணை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பழத்துறையாறு_அணை&oldid=3591037" இலிருந்து மீள்விக்கப்பட்டது