மருங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மருங்கூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,096 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

மருங்கூர் (ஆங்கிலம்:Marungur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மருங்கூர் சுசீந்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கே குமாரபுரம் தோப்பூரும், கிழக்கே அமராவதிவிளையும், மேற்கே இரவிபுதூரும், தெற்கே மயிலாடியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.மருங்கூர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.மருங்கூர் மூன்று முக்கிய தெருக்களை உள்ளடக்கியது வடக்கு,தெற்கு,ஆர் சி தெரு.இரண்டு பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.மருங்கூரில் விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்கள் வீடு மனைகளாக மாறி வருகின்றன.மக்கள் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் மூலமும்,காட்டாற்றில் இருந்தும் பெறுகின்றனர்.அவற்றை இரண்டு பெரிய குளங்கள் மூலம் தேக்கி விவசாயத்திற்கு உபயோகிக்கின்றனர். இவ்வூரில் ஆபத்து காத்த அம்மன் கோவில்,இடமலை கண்ட சாஸ்தா கோவில்,பஜனை மடம் போன்ற இந்து கோவிலும்,ஆர் சி சர்ச்சும்,சி‌எஸ்‌ஐ சர்ச்சும் உள்ளன. மருங்கூர் பஞ்சாயத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய வியாபார மையமாகவும் உள்ளது.

சங்ககாலத்தில் மருங்கூர்[தொகு]

சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் ஆகியோர் அந்தப் புலவர்கள்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மருங்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மருங்கூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருங்கூர்&oldid=1921659" இருந்து மீள்விக்கப்பட்டது