குமாரபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  கிராமம்  —
குமாரபுரம்
இருப்பிடம்: குமாரபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°20′34″N 77°50′07″E / 8.342877°N 77.835238°E / 8.342877; 77.835238ஆள்கூற்று: 8°20′34″N 77°50′07″E / 8.342877°N 77.835238°E / 8.342877; 77.835238
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]
பஞ்சாயத்து தலைவர் திருமதி.பொன் கிளாடிஸ்
மக்கள் தொகை 1,400 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

குமாரபுரம் (Kumarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1400 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குமரபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபுரம்மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அமைப்பு மற்றும் வசதிகள்[தொகு]

இந்த ஊர் திசையன்விளை-திருநெல்வேலி முக்கிய சாலையில்(மாநில நெடுஞ்சாலை)அமைந்துள்ளது. இந்த ஊரில் 8 தெருக்களும்,340 வீடுகளும் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் 3 அல்லது 4 குடிதண்ணீர் குழாய்கள் உள்ளன.

Kumarapuram Map

மேலும் வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் இணைப்புகளும் வழங்கப்படுகிறது. இதற்கென தனியாக நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு தெருக்களுக்கு காலை 3மணி நேரம் தண்ணீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிற்து. இதுமட்டுமில்லாது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கென தனியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன, இங்கு ஒரு ஊராட்சிமன்ற அலுவலகமும், ஒரு நியாயவிலைக் கடையும், கிராம நிர்வாக அலுவலகமும் அமைந்துள்ளது. பெண்களுக்கென மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடமும் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பொதுக்கழிப்பிடமும் உள்ளது. ஊர்மக்களுக்கு உருவாகும் நோய்களை குணப்படுத்த 24 மணிநேர ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

இங்கு 3 கல்வி நிலையங்கள் உள்ளன. 1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2.இந்து ஆரம்பப்பள்ளி 3.அங்கன்வாடி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி[தொகு]

இந்த பள்ளிக்கூடம் அரசால் நிர்வகிக்கபடுகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கபடுகிற்து. இந்த பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 80 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கணிணி வசதியும்(3 PC,3 Laptop),மின்சார வசதியும், தண்ணீர் வசதியும் உள்ளது. இந்த பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் உள்ளன. மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கபடுகிறது. இதெற்கென2 சத்துணவு பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர். மாலை வேளைகளில் விளையாடுவதற்கான வசதியும் உள்ளது.

இந்து ஆரம்பப்பள்ளி[தொகு]

இந்த பள்ளிக்கூடம் தனிநபரால் நிர்வகிக்கபடுகிறது.இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கபடுகிற்து.இந்த பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.சுமார் 50 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கபடுகிறது. இதற்கென 2 சத்துணவு பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.மாலை வேளைகளில் விளையாடுவதற்கான வசதியும் உள்ளது.

அங்கன்வாடி[தொகு]

இந்த பள்ளிக்கூடம் அரசால் நிர்வகிக்கபடுகிறது. 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கபடுகிற்து. இலவச மதிய உணவு வழங்கபடுகிறது.இதெற்கென 2 ஆசிரியர்களும்,2 சத்துணவு பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர். மாலை வேளைகளில் விளையாடுவதற்கான வசதியும் உள்ளது.

விவசாயம்[தொகு]

இந்த ஊரில் 3 சதுரகிலோ மீட்டர் நிலப்பரப்பில் நெற்பயிர் விளைவிக்கப்படுகிறது. இதற்கு தண்ணீர் பாசனத்திற்க்காக ஒரு குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாது தென்னை மரங்களும்,வாழைமரங்களும் விளைவிக்கப்படுகிறது.

வழிபாட்டுதலங்கள்[தொகு]

இங்கு 3 முக்கிய மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.2 பிரபலமான இந்து கோவில்கள் (ஸ்ரீ சித்திபுத்தி விநாயகர் திருக்கோவில்,ஆலடி ஸ்ரீ பத்மநாப சுடலைமாடசுவாமி திருக்கோவில்) 75 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில்கள்.மேலும் ஒரு கிருஸ்தவ ஆலயமும், ஒரு பள்ளிவாசலும் அமைந்துள்ளன.

ஆலடி ஸ்ரீ பத்மநாப சுடலைமாடசுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில் பெருங்கொடை விழா நடைபெரும்.ஸ்ரீ சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலில் வருடந்தோறும் வருஷாபிஷேகம் நடைபெறும்.

விக்கிமேப்பியாவில் குமாரபுரம்[தொகு]

அமைவிடம்

சான்று[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரபுரம்&oldid=2194061" இருந்து மீள்விக்கப்பட்டது