நாகர்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரை தமிழ்நாடு நகராட்சி பற்றியது. யாழ்ப்பாணக் கிராமம் பற்றி அறிய நாகர்கோயில் (இலங்கை) கட்டுரையைப் பாருங்கள்.
நாகர்கோவில்
—  நாகர்கோவில் மாநகராட்சி  —
நாகர்கோவில்
இருப்பிடம்: நாகர்கோவில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43ஆள்கூற்று: 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.
மாநகராட்சி தலைவர் காலியாக உள்ளது.
மக்கள் தொகை 2,08,149 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


13 metres (43 ft)

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது.[3] இம்மாநகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும்.

நாகர்கோவில் நகராட்சி ஆனது பிப்ரவரி 14 , 2019 அன்று தமிழக அரசால் நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பொருளாதாரம்[தொகு]

மீன்வலை தயாரிப்பு வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று. வணிக மீன் பிடிப்புக்காக உள்நாட்டுச் சந்தைகளிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் இவ்வலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தென்னை நார் தயாரிப்பு, பூ வணிகம், கைத்தறி நெசவு, ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஏற்றுமதிச் சந்தைக்காக பின்னற்பட்டி தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.

மதங்கள்[தொகு]

இந்நகரில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினர் வாழ்கின்றனர்.

கோயில்கள்[தொகு]

 • நாகராஜா கோவில்
 • அழகம்மன் கோவில்
 • ஸ்ரீ அற்புத வினாயகர் கோவில் மீனாட்சிபுரம்
 • மணியடிச்சான் கோவில்,அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோவில்
 • கிருஷ்ணன் கோவில்
 • இடர்தீர்த்த பெருமாள் கோவில்

வடிவீஸ்வரம்

கிறிஸ்தவ ஆலயம்[தொகு]

பள்ளிகள்[தொகு]

 • ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி
 • இராணி சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி(எஸ்.எல்.பி.)
 • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி
 • ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி
 • லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி
 • கார்மல் மேல்நிலைப் பள்ளி
 • புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி
 • கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி
 • டதி மேல்நிலைப் பள்ளி
 • தேசிக விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி(டிவிடி)
 • புனித மிக்கேல் உயர்நிலை பள்ளி (வேதநகர்)

கல்லூரிகள்[தொகு]

 • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி
 • தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி

மக்கள் வகைப்பாடு[தொகு]

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,24,329 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 110,132 ஆண்கள், 114,197 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 95.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.03%, பெண்களின் கல்வியறிவு 93.74% ஆகும். மக்கள் தொகையில் 19,034 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நாகர்கோவில் மாநகரம் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது. இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில். நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா எனும் கோவிலின் பெயராலே இவ்வூருக்கு நாகர்கோவில் எனும் பெயர் வந்தது. இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது.

முதுபெரும் தேச பக்தர், கம்யூனிஸ்ட் தலைவர், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ப..ஜீவானந்தம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்கு தம்பி பாவலர், எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை, வித்துவான் லட்சுமணபிள்ளை போன்ற தமிழறிஞர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஜெ.ஆர்.வி.எட்வர்ட், அ.கா.பெருமாள், குமரிமைந்தன், எம்.வேதசகாயகுமார், தெ.வே.ஜெகதீசன், மா.சுப்ரமணியம், ஜேம்ஸ் ஆர் டேனியல், இரணியல் கலைத்தோழன் மற்றும் லட்சுமி மணிவண்ணன் போன்றவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து[தொகு]

பேருந்து நிலையம்[தொகு]

அண்ணா பேருந்து நிலையம்[தொகு]

குறுகிய தொலைவுப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம்[தொகு]

தொலைதூரப் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தொடர்வண்டி நிலையம்[தொகு]

நாகர்கோவில் மாநகரம் இரண்டு தொடர்வண்டி நிலையங்களைக் கொண்டது,

 1. நாகர்கோவில் சந்திப்பு
 2. நாகர்கோவில் மாநகரம்

இதில் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் முக்கியத் தொடர்வண்டி நிலையமாகும்.


சுற்றுலாத் தலங்கள்[தொகு]

நாகர்கோவில் மாநகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?".
 4. "Nagercoil". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்&oldid=2680545" இருந்து மீள்விக்கப்பட்டது