உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி மண்டபம், கன்னியாகுமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி நினைவு மண்டப நுழைவாயில்
இரவில் காந்தி மண்டபம்
கடற்கரையில் காந்தியும் காமராசரும் உரையாடும் சிலை

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும்.

கலசம் வைத்த இடம்

[தொகு]

1925, 1937 ஆகிய ஆண்டுகளில் மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு இரண்டு முறை வருகை தந்தார். [1]1948இல் அவர் இறந்த பிறகு, அவருடைய அஸ்தியானது 12 கலசங்களில் வைக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கரைக்க கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கலசங்களில் ஒன்று கன்னியாகுமரியில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அக்கலசம் வைக்கப்பட்ட இடத்தில் இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.[2]

சிறப்பு

[தொகு]

இது ஒடிசா மாநில கட்டடக்கலையைச் சார்ந்தது.[1] இம்மண்டபம் 1956ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் உள்ள மையக் கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தி இறந்தபோது அவருடைய வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சூரியக் கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருக்கும் இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது [2]

பார்வையாளர் நேரம்

[தொகு]

இம்மண்டபத்தின் சிறப்பாகும். இது காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்வையாளர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.[3] இதன் அருகில் பெருந்தலைவர் காமராசர் மணி மண்டபம் உள்ளது. கடற்கரையில் இவ்விரு மண்டபங்களுக்கும் இடையில் காந்தியும், காமராசரும் உரையாடும் சிலை உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]