சொத்தவிளை கடற்கரை
சொத்தவிளை கடற்கரை | |
---|---|
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரை | |
நாடு | ![]() |
நாடு | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
சொத்தவிளை கடற்கரை (Sothavilai Beach) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். நாகர்கோவிலுக்கு மிக அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது. இந்த கடற்கரை 4 கிமீ நீளத்துக்குப் பரந்துள்ளது.[1] அழகிய நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கும் இக்கடற்கரையில் சிறு, சிறு குடில்கள் மூலம் தமிழக சுற்றுலாத்துறை அழகுப்படுத்தியுள்ளது. காட்சிக்கோபுரம், அழகிய புல் வெளிகள், சிறுவர் பூங்காக்கள் இக்கடற்கரையின் அருகில் அமைந்துள்ளன.
இது தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றாகும். 2004 சுனாமி காலத்தில் மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ "கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்". BBC News தமிழ். 2023-06-09. 2023-06-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சொத்தவிளை கடற்கரை". 2018-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது.