நெய்யூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெய்யூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்[1]
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 12,917 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

நெய்யூர் (ஆங்கிலம்:Neyyoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12917 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். நெய்யூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்யூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்[தொகு]

  1. நெய்யூர் அஞ்சல் அலுவலகம்
  2. அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
  3. தென்னிந்திய திருச்சபை பேராலயம்

நாகர்கோவிலிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.சமயப் பரப்புக் குழுவினரால் தொடங்கப் பட்ட மருத்துவமனையால் சிறப்பாக அறியப்படுகிறது.உலக சுகாதார அமைப்பால் (W.H..O) ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய் மையம் இங்குள்ளது.தற்சமயம் இது நெய்யூர் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இம்மருத்துவமனை பல சிறப்பு துறைகளுடன் சிறப்பாக செயல்படுவதால் FRCS படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்குஒப்புதல் பெற்றுள்ளது. இங்கு செவிலியர் பள்ளியும் உள்ளது. லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்.இங்கு உள்ளது

இந்திய விவரச் சுவடி -கன்னியாகுமரி மாவட்டம்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யூர்&oldid=1905902" இருந்து மீள்விக்கப்பட்டது