கருங்கல் (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருங்கல்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு சஜ்ஜன்சிங் ஆர்.சவான் இ.ஆ.ப
மக்கள் தொகை 15,832 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கருங்கல்(Karungal) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,832 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கருங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருங்கல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கருங்கலும் கலையும்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த காலகட்டத்தில் கூட மேடை நாடகங்கள் நடந்து வருகிறது .சினிமாவின் ஆதிக்கம், சின்ன திரை இருந்தும் மேடை நாடகம் குமரி மாவட்டத்தில் இன்றும் கோவில்கள், தேவாலயங்களில் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் தெற்கு தக்கலை, திங்கள் நகர், குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம் போன்ற பகுதியில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கலைஞர்களுக்கு என இயக்கம் செயல் பட்டு வந்தது. இந்த இயக்கத்தை தொடங்கியவர் கருங்கல் பகுதியில் உள்ள தமிழ் நாடு அரசால் கலை நன்மணி விருது வழங்கப்பட்ட ஆர்.எம்.மஞ்சு. குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாடகம் வளர்த்த கலைஞர்கள் இருந்தாலும் அவர்களில் முதன்மையானவர் கருங்கல் பகுதியில் உள்ள மறைந்த கலை நன்மணி ஆர்.எம்.மஞ்சு என்பதில் எள் அளவும் ஐயமில்லை கலை நன்மணி ஆர் எம்.மஞ்சு

கலை நன்மணி ஆர் எம்.மஞ்சு (என் அப்பா) தனது 40 வருட கலை பயணத்தில் சுமார் 2,500* மேடை மேல் நடித்துள்ளார் ( நாடகம், நடனம்-டி.ஆர், சிவாஜி, மணிவண்ணன் (4 மாவட்டம் ). தனது 13 வயதிலிருந்து நடித்துள்ளார். அவர் நடித்த முதல் நாடகம் கருங்கல் அ.மத்தியாஸ் இயக்க ஜ.எம்.ஜோசப்ராஜ் கதை, வசனத்தில் "கடமை தந்த பரிசு ". 2-வது நாடகம் 17-12-1977 இல் கருங்கல் புனித சவேரியார் கோவில் இரணியல் கலைதோழன் கதை , வசனம் எழுத கருங்கல் அ.மத்தியாஸ் இயக்க "மன்னிப்பு" இப்படி பிறர் இயக்கி நடித்த நாடகம் 30* (2012 வரை ) அவை பல மேடைகள்...( சுமார் 700* மேடைகள்)....! அவரே ... எழுதி , இயக்கிய நாடகங்கள் 40* அதில் முதல் நாடகம் 13-4-1979 இல் கருங்கல் ராஜா திரையரங்கத்தில் "இதய தாகம் " 2-வது நாடகம் 13-4-1980 இல் கருங்கல் ராஜா திரையரங்கத்தில் "உறவுகள் உறங்காது " இப்படி 2012 வரை சுமார் 650* மேடை. திருநெல்வேலி , தூத்துக்குடி , மதுரை, குமரி என 4 மாவட்டமும், கேரளாவிலும் சேர்த்து 1150* மேடைக்கு மேல் நடன நிகழ்ச்சியில் நடிகர் டி .ஆர்., மணிவண்ணன் , சிவாஜி ஆகியோர் வேடத்தில் நடித்துள்ளார் இவரது கலை சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு 2004-2005 இல் கலைநன்மணி விருதை வழங்கியது. குமரி கன்னி தமிழ் , கலை இலக்கிய சங்கம் நாடக காவலர் விருதை வழங்கி கவுரவித்தது. இவர் கலைஞர்களின் நலன் கருதி "கலைஞர்கள் நல இயக்கம்" (tnakne ) ஆரம்பித்தார். பொது சேவை யில் தனது இறுதி காலத்தை கடத்தி வந்தார். இவர் 1-9-2012 இரவு 11.30 மணிக்கு கருங்கல் அன்னை மருத்துவமனை வளாகத்தில் முதலுதவி கூட கிடைக்காமல் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது மிகவும் வேதனையாக உள்ளது . ( தொடரும்) -மஞ்சுவின் மகன் எ.ஆர்.பிரபு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்_(ஊர்)&oldid=1461618" இருந்து மீள்விக்கப்பட்டது