தக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தக்கலை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை (Thuckalay ,തക്കല). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47 ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஊராட்சிகள்[தொகு]

தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]

  1. ஆத்திவிளை
  2. சடையமங்கலம்
  3. கல்குறிச்சி
  4. மருதூர்குறிச்சி
  5. முத்தலக்குறிச்சி
  6. திக்கணங்கோடு
  7. நுள்ளிவிளை

சிறப்புகள்[தொகு]

இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கலை&oldid=3307819" இருந்து மீள்விக்கப்பட்டது