மார்த்தாண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்த்தாண்டம் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத்தலமாகும். இதைத் ’தொடுவட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்[சான்று தேவை]. மார்த்தாண்டம் பகுதியின் தேன் வளர்ப்புத் தொழில் சிறப்பாக உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளைவிட இங்கு தேன் உற்பத்தி மிகுதியாக இருந்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ள இதன் நிலவியல் அமைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது.[1] இங்கு தேன் வளர்ப்போருக்கான பழமையான கூட்டுளவு சங்கம் உள்ளது.[2]

பெயர்காரணம்[தொகு]

திருவிதாங்கூரை உருவாக்கிய மன்னர் மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இப்பெயர் வந்திருக்கலாம்[சான்று தேவை].

கல்வி நிலையங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

 • நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி
 • மார்தாண்டம் பொறியியல் கல்லூரி

பள்ளிகள்[தொகு]

 • குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
 • கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

போக்குவரத்து[தொகு]

கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்நகர் அமைந்துள்ளது.

மார்த்தாண்டம் பேருந்து நிலையம்[தொகு]

இப்பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மற்றும் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள்ளேயும், சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, மதுரை, திருச்செந்தூர் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூர், புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சமய வழிபாட்டு தலங்கள்[தொகு]

மார்த்தாண்டம் பகுதி கிறிஸ்தவம், இந்து சமயம் சார்ந்தவர்கள் சரி சமமாகவும், இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் வாழ்கிறார்கள்.

இந்து சமய கோவில்கள்[தொகு]

 • அய்யப்பர் கோவில் (வெடி வச்சான் கோவில்) வெட்டுமணி
 • சிறி கிருஷ்ணன் கோவில், கண்ணக்கோடு
 • சிதறால் ஜெயின் மலைக்கோவில்

கிறிஸ்தவ ஆலயங்கள்[தொகு]

 • மார்த்தாண்டம் சிஸ்ஐ ஆலயம்
 • புனித அந்தோணியார் ஆலயம், வெட்டுமணி
 • இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
 • புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்[தொகு]

கன்னியாகுமரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஒன்றான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம் இங்கு அமைந்துள்ளது.போக்குவரத்து அலுவலக எண் தா.நா.- 75(TN75) [3]

புற இணைப்புகள்[தொகு]


== ஆதாரங்கள் ==34567890-

 1. ஆர்.ஜெய்குமார் (2018 நவம்பர் 3). "தேன் ஊற்றெடுக்கும் ஊர்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 நவம்பர் 2018.
 2. "தேனீ வளர்ப்பு தொழில் மற்றும் சந்தைப்படுத்தும் முறை:". கட்டுரை. தவேப வேளாண் இணைய தளம். பார்த்த நாள் 10 நவம்பர் 2018.
 3. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தாண்டம்&oldid=2808093" இருந்து மீள்விக்கப்பட்டது