இரட்சணிய சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரட்சணிய சேனை (The Salvation Army), ஒரு அனைத்துலக் கிறித்தவ நற்செய்தி இயக்கமாகும். இவ்வியக்கம் தற்போது 118 நாடுகளில் இயங்கி வருகிறது. இரட்சணிய சேனை இயக்கத்தின் தலைமைச் செயலகம் இலண்டன் நகரின் குயீன் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது.

இவ்வியக்கம் 1865 ஆம் ஆண்டு வில்லியம் பூத், அவரது மனைவி காதரின் பூத் என்பவர்களால் கிழக்கு இலண்டன் அறவியக்கமாக துவக்கப்பட்டது. இவ்வியக்கம் அரை-இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இரட்சணிய சேனையின் நிறுவனர் வில்லியம் பூத் அவர்கள் லண்டனில் உள்ள நாட்டிங்காம் என்னுமிடத்தில் 1829 ஆம் ஆண்டு பிறந்தார்.

இரட்சணிய சேனையானது கிறித்தவ சுவிசேஷம் மற்றும் சமூக சேவை பணிகளை ஏழை எளியவர்களிடத்திலும், திக்கற்றவர்களிடத்திலும் செய்து வருகிறது.

உலகநாடுகளில் பரவிய ஆண்டு விவரம்[தொகு]

The worldwide expansion of the Salvation Army

இந்தியாவில் இந்த அமைப்பு 1882 ஆம் ஆண்டிலும் இலங்கையில் 1883 ஆ‌ம் ஆண்டிலும் மலேசியாவில் 1938 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. நேபாளத்தில் இந்த அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்சணிய_சேனை&oldid=1670548" இருந்து மீள்விக்கப்பட்டது