பேச்சு:இரட்சணிய சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

இலங்கையில் இரட்சணீய சேனை என்று பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் முத்திரையிலும் இரட்சணீய சேனை என்றுள்ளது. ஆனால் இங்கே கட்டுரையில் இரட்சணிய ... என்று ணகரம் குற்றெழுத்தாகக் காணப்படுகிறது. இவற்றில் எது சரியென்று புரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 05:30, 1 சூன் 2014 (UTC)

இலங்கையிலும் இரட்சணிய சேனை என்றே புழக்கத்தில் இருந்ததாக எனக்கு நினைவு. அஞ்சல் தலையில் பிழை விட்டிருக்கலாம் அல்லவா? இலங்கை அரசு அறிவிப்புப் பலகைகளில் இவ்வாறான பிழைகள் வருவதில் ஆச்சரியமில்லை. கூகுளிலும் ஒரு சொல்லும் இல்லை. நீங்கள் தொடங்கி விட்டீர்கள். இனிமேல் வரலாம்:) ஆனாலும் எது சரி என்பதைத் தமிழறிஞர்கள் தான் சொல்ல வேண்டும்.--Kanags \உரையாடுக 05:51, 1 சூன் 2014 (UTC)
மேலும் கட்டுரையை எழுதியவர் ஒரு தமிழகத்தவர். அங்கும் இரட்சணிய சேனை என்றே அழைக்கப்படுகிறது போல் தெரிகிறது. எனவே வார்ப்புருவை முறையற்ற வகையில் சேர்க்காதீர்கள்.--Kanags \உரையாடுக 05:55, 1 சூன் 2014 (UTC)
எதற்காக நான் முறையற்ற வகையில் வார்ப்புரு சேர்ப்பதாகக் குற்றஞ் சாட்டுகிறீர்கள்? கொழும்பில் கொம்பனித் தெருவிலுள்ள The Salvation Army அமைப்பின் இடத்திலும் அவர்கள் உத்தியோகபூர்வமாக இரட்சணீய சேனை என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.--பாஹிம் (பேச்சு) 15:00, 1 சூன் 2014 (UTC)
தமிழகத்தில் இரட்சணிய சேனை என்றே அழைக்கப்படுகிறது. --ஆர்.பாலா (பேச்சு) 15:09, 1 சூன் 2014 (UTC)
ஆன்மிகம்-ஆன்மீகம் என்பதில் வரும் மயக்கமே இதுவும். “இரட்சணிய யாத்திரிகம்” என்ற கிறித்தவக் கம்பரின் நூற்பெயரை ஒப்பு நோக்கவும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:16, 3 சூன் 2014 (UTC)
அப்படித்தான் நானும் நினைக்கிறேன். பேச்சு வழக்கில் சிறு வித்தியாசங்கள் நிகழ்ந்து எழுத்து வழக்கில் நிலைத்து விடுவதுண்டு.--பாஹிம் (பேச்சு) 10:24, 3 சூன் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரட்சணிய_சேனை&oldid=1670597" இருந்து மீள்விக்கப்பட்டது