வில்லியம் பூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வில்லியம் பூத் (William Booth, 10 ஏப்ரல் 1829 – 20 ஆகஸ்ட் 1912) என்பவர், பிரித்தானிய மெதடிஸ்த போதகர். இவர் கிறித்தவ நற்செய்தி இயக்கமான இரட்சணிய சேனை என்னும் சேவை இயக்கத்தைத் தாபித்து அதன் முதல் ஜெனரல் (1878–1912) ஆகவும் இருந்தார். இராணுவத்தைப் போன்ற கட்டமைப்புக் கொண்ட இந்த இயக்கம், இலண்டனில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வளர்ச்சியடைந்தது. இன்று இது மனிதாபிமான உதவிகளை வழங்கும் பெரிய இயக்கங்களில் ஒன்றாக ஆகியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பூத்&oldid=1839125" இருந்து மீள்விக்கப்பட்டது