உதகமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உதகமண்டலம்
—  சிறப்பு நிலை நகராட்சிகள்  —
உதகமண்டலம்
இருப்பிடம்: உதகமண்டலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°24′N 76°42′E / 11.40°N 76.70°E / 11.40; 76.70ஆள்கூற்று: 11°24′N 76°42′E / 11.40°N 76.70°E / 11.40; 76.70
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் பி. ஷங்கர் இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர் சத்பாமா
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி உதகமண்டலம்
சட்டமன்ற உறுப்பினர்

புத்தி சந்திரன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

93,921 (2001)

6,772/km2 (17,539/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

13.87 square kilometres (5.36 sq mi)

2,213 metres (7,260 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/udhagamandalam/


ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,082 ஆண்கள், 45,348 பெண்கள் ஆவார்கள். உதகமண்டலத்தில் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது.. உதகமண்டலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.07% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.53%, பெண்களின் கல்வியறிவு 85.86% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. உதகமண்டலம் மக்கள் தொகையில் 7,781 (8.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 987பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன.[4]

வரலாறு[தொகு]

12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.

அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.

கற்பூர மரம்[தொகு]

உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.[5]

உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு[தொகு]

உதகமண்டல மலைக்காட்சி அரங்கு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Udhagamandalam Population Census 2011பார்த்த நாள்: டிசம்பர் 11, 2015
  5. பெருமையை பறைசாற்றும் கற்பூர மரம்!

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதகமண்டலம்&oldid=2116212" இருந்து மீள்விக்கப்பட்டது