குன்னூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்னூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1]

இந்த வட்டத்தின் தலைமையகமாக குன்னூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 10 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,57,744 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 53,803 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 2,354 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 88.27% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னூர்_வட்டம்&oldid=2685958" இருந்து மீள்விக்கப்பட்டது