நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீலகிரி மலை இரயில் பாதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இந்திய மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
நீலகிரி மலை தொடர்வண்டி
வகை Cultural
ஒப்பளவு ii, iv
உசாத்துணை 944
UNESCO region Asia-Pacific
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1999 (23rd தொடர்)
விரிவாக்கம் 2005; 2008

நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இந்தியாவிலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை தொடருந்து பாதைகளுள் ஒன்றாகும். (சிம்லா மலைப்பாதை, டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, மாதேரன் மலைப்பாதை ஆகியவை மற்ற மூன்றாகும்).

பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.

உதகமண்டலத்திற்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை (rack railway) ஆகும்.

வரலாறு[தொகு]

இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை - மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக (World Heritage Site) ஆக அறிவிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]