ஓ' வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ' வேலி
O' Valley
பேரூராட்சி
ஓ' வேலி is located in தமிழ் நாடு
ஓ' வேலி
ஓ' வேலி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°27′17″N 76°28′43″E / 11.45472°N 76.47861°E / 11.45472; 76.47861ஆள்கூறுகள்: 11°27′17″N 76°28′43″E / 11.45472°N 76.47861°E / 11.45472; 76.47861
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்21,943
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ஓ' வேலி (O' Valley, ஓ' பள்ளத்தாக்கு), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.

ஓ' வேலி பேரூராட்சி, கூடலூரிலிருந்து 14 கிமீ தொலைவிலும், நடுவட்டத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும், நெல்லியாளத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 மக்கள்தொகையும் கொண்டது.[3][4][5] ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Census of India Search details". censusindia.gov.in. 10 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்
  3. http://www.townpanchayat.in/ovalley/population
  4. O Valley Town Panchayat Population Census 2011
  5. "O' Valley Town Panchayat". 2019-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ%27_வேலி&oldid=3547094" இருந்து மீள்விக்கப்பட்டது