ஊட்டி ஏரி

ஆள்கூறுகள்: 11°24′22″N 76°41′18″E / 11.4061°N 76.6882°E / 11.4061; 76.6882
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊட்டி ஏரி
உதகமண்டலம் ஏரி
தமிழ்நாட்டில் அமைவிடம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஊட்டி ஏரி
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, உதகமண்டலம்
ஆள்கூறுகள்11°24′22″N 76°41′18″E / 11.4061°N 76.6882°E / 11.4061; 76.6882
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேலாண்மை முகமைதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
கட்டியது1824
அதிகபட்ச நீளம்2.5 km (1.6 mi)[1]
அதிகபட்ச அகலம்140 m (460 அடி)[2]
மேற்பரப்பளவு3.885 km2 (1.500 sq mi)[2]
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,220 m (7,280 அடி)
குடியேற்றங்கள்உதகமண்டலம்

ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3] இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும்.

வரலாறு[தொகு]

ஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் வெட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் கரை உடைந்து மூன்று சந்தர்ப்பங்களில் நீரின்றிப் போயுள்ளது. ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் அசலான பரப்பளவு குறைந்து போயுள்ளது, காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம், ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்து ஏரியின் பரப்பளவு சுருக்கப்பட்டுவிட்டது. ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வசம் வந்தது.[3]

அம்சங்கள்[தொகு]

இந்த ஏரியைச் சுற்றி யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்தும், இதன் கரையில் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது.[2] கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டி போன்றவை இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன.[4][5]

படகு இல்லம்[தொகு]

ஏரியை ஒட்டி படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்டது.[2] ஏரியில் படகுகளில் செல்ல பயணிகளுக்கு மிகுந்த ஆர்வமுள்ளது. படகு துறையில் துடுப்பு படகுகள், மிதி படகுகள், மோட்டார் படகுகள் போன்றவை உள்ளன.[6] இங்கு ஒரு பூங்காவும்,[6] அதில் ஒரு சிறிய தொடர்வண்டியும் சுற்றிவருகிறது.[3] பிற குறிப்படத்தக்க அம்சங்களாக சுற்றுலாத்துறையால் இங்கு ஒரு உணவகம் நடத்தப்படுகிறது. மேலும் படகு இல்லம் முன்பு குதிரைவண்டி சவாரி வசதியும் உள்ளது.[2]

பின்னடைவுகள்[தொகு]

ஏரியில் பெரிய பிரச்சனையாக உள்ளது ஆகாயத்தாமரையின் பெருக்கம்தான். பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து இந்தக் களைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.[7] தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு ஆய்வின்படி ஊட்டி ஏரி மாநிலத்தின் மிகவும் மாசுபட்ட ஏரிகளில் ஒன்றாக உள்ளது. மனிதர்கள் குடிக்கவோ அல்லது குளிக்கவோ தகுதியற்றதாக உள்ளதாக உள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://citypatriots.com/asia/india/tamil-nadu/ooty/ooty-lake
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "OOTY LAKE". Indiantravelportal.com. Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01.
  3. 3.0 3.1 3.2 "OOTY LAKE" பரணிடப்பட்டது 2011-01-14 at the வந்தவழி இயந்திரம்.
  4. "Ooty - Lake".
  5. "Summer festival in Ooty" பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம், தி இந்து, India, 27 Mar 2010 
  6. 6.0 6.1 "Ooty: Ooty Lake" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்.
  7. Radhakrishnan, D (2 Jan 2007), "Weed problem continues to plague Ooty Lake" பரணிடப்பட்டது 2007-11-07 at the வந்தவழி இயந்திரம், தி இந்து, India 
  8. "Ooty lake one of the dirtiest in Tamil Nadu, reveals study". 25 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டி_ஏரி&oldid=3656937" இலிருந்து மீள்விக்கப்பட்டது