பல்லாவரம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்லாவரம் ஏரி
Chennai area locator map.svg
பெரிய ஏரி
அமைவிடம்தமிழ்நாடு, சென்னை
ஆள்கூறுகள்12°57′30.73″N 80°9′5.7″E / 12.9585361°N 80.151583°E / 12.9585361; 80.151583ஆள்கூறுகள்: 12°57′30.73″N 80°9′5.7″E / 12.9585361°N 80.151583°E / 12.9585361; 80.151583
Settlementsசென்னை

பல்லாவரம் ஏரி அல்லது பெரிய ஏரி (Pallavaram lake) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி பல்லாவரம்-குரோம்பேட்டை தொடர்வண்டி பாதையின் கிழக்குப்பக்கத்தில் உள்ளது. இது ஒரு பெரிய ஏரியாக இருந்தும் வறண்டும், தொழிற்சாலை கழிவு நீராலும், குப்பைகளாலும் மாசடைந்துள்ளது.

இங்கு ஒரு இடுகாடும் உள்ளது இங்கு பிணங்களை புதைத்துவருகின்றனர்.

சூழலியல் தாக்கம்[தொகு]

இந்த ஏரி தொடர்வண்டிகளில் செல்பவர்களுக்கு நன்கு தெரியும் வகையில் உள்ளது.[1] இந்த ஏரியில் ஒரு துளி நீரும் இல்லை.[2] மேலும் குப்பைகள் குவிந்து மாசடைந்த நிலையில் உள்ளது.[3]

ஏரியின் சுகாதாரத்தின் நிலை பின்வறுமாறு

  • ஏரியின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ள தோல் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர். ஏரியில் தசாப்தங்களாக கலந்துவருகிறது. மேலும் இப்பகுதியில் நடந்ததுவரும் என்று பெரிய அத்துமீறல் என்றால் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களால் ஏரியின் பரப்பு சுருங்கி வருகிறது.
  • ஏரியின் கிழக்கு பக்கத்தில், ஏரியின் நீர்தேங்கு பகுதியில் 2001 இல் சாலை கட்டுமானத்துக்காக ஏரியின் மதகுகள் இடிக்கப்பட்டன.
  • ஏரியின் நடுவில் குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகியவற்றை தொரப்பாக்கத்துடன் இணைக்கும் ஆர சாலையை அமைத்து ஏரி இரண்டாக துண்டிக்கப்பட்டது.[4]
  • ஏரியின் தென்மேறகு பகுதியில் ஏரியின் உள்ளே ஒரு பெரிய அத்துமீறலாக மதில் சுவர்கள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாவரம்_ஏரி&oldid=2444475" இருந்து மீள்விக்கப்பட்டது