சுவேதா ஆறு
Jump to navigation
Jump to search
பச்சைமலை மற்றும் கொல்லி மலையின் வடிகால் நீரினை சுவேதா ஆறு எடுத்துச் செல்லுகிறது. வசிட்ட நதியுடன் இணைந்து வெள்ளாறு நதியாக உருப்பெற்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சுவேத ஆறு என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதை வழங்கப்படுறது. பஞ்ச பாண்டவரில் ஒருவனான அருச்சுனன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்திருந்தபோது கொல்லி மலையை அடைந்தானாம். சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான். ஆனால் பூசைக்கு வேண்டிய நீரில்லை. தன் காண்டீபத்தில் கணை தொடுத்துப் பாறைமீது எய்தான். உடனே அவ்விடத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு அதனின்றும் நீர் பெருகி ஆறாக ஓடத் தொடங்கியது. அருச்சுனனுக்குச் ‘சுவேத வாகனன்’ என்ற ஒரு பெயரும் உண்டு. சுவேதவாகனனால் கொணரப் பட்ட நதி சுவேத நதியாயிற்று.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். 17 நவம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.