வரட்டுப்பள்ளம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம் மற்றும் மீன் வளர்ப்பிற்கும், வன விலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது[1]. வரட்டுப்பள்ளம் அணைக்கு கல்மடுவு, கும்பரவாணி பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.

வரட்டுப்பள்ளம் அணை 1980-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. வரட்டுப்பள்ளம் அணையானது மேற்கு தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்து வரும் மழைநீரைத் தேக்கி வைத்து அந்தியுரைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் 1.7 கி.மீ., அதிகபட்சமாக 17 மீ. உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும்.[சான்று தேவை] இந்த அணையால் பயன்பெறும் பாசனப்பரப்பு 2924 ஏக்கர்.

இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப் பாதையில் தாமரைக்கரை, பர்கூர், தட்டக்கரை, கர்கேகண்டி வழியாக எளிதாக மைசூரை அடையலாம். ஆனால் சாலை சற்றே குறுகலானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அந்தியூர் பகுதியில் கனமழை வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்கிறது". 2013-09-02. Archived from the original on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2014-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டுப்பள்ளம்_அணை&oldid=3761260" இலிருந்து மீள்விக்கப்பட்டது