பாம்பாறு (வட தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பாறு, தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தின் குப்பம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீரில் தோன்றி, மத்தூர் ஒன்றியம் ஓதிக்குப்பம் ஏரியை வந்தடைகிறது. ஏறக்குறைய 50 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியிலிருந்து தொடங்கும் இந்த ஆறு பர்கூர் ஒன்றியம், மத்தூர் ஒன்றியம், ஊத்தங்கரை ஒன்றியம் போன்ற பகுதிகளில் பாய்ந்து பாம்பாறு நீர்த்தேக்கம் என்னும் பெயரில், கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே அணை கட்டப்பட்டுள்ள அணையை வந்தடைகிறது. [1] அணை நிரம்பியபின் வெளியேறும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றை வந்தடைகிறது. ஆந்திர அரசு கட்டிய தடுப்பணைகளால் ஒதிக்குப்பம் ஏரிக்கு வரும் நீர் மிகவும் குறைந்து போயுள்ளதால் அணை பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது.அணை மழை காலங்களில் முழுவதும் நிரம்பி விடும் மீன்கள் வளர்க்கப்பட்டு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஊத்தங்கரை வட்டாரத்தில் முக்கிய நீர் ஆதாரம். ஆறும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. "ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் பாம்பாறு 100 நாள் வேலை திட்டம் மூலம் சீரமைக்க கோரிக்கை". தி இந்து: 4. பெப்ரவரி 2017. doi:20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பாறு_(வட_தமிழ்நாடு)&oldid=3011354" இலிருந்து மீள்விக்கப்பட்டது