கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் ஏரி | |
---|---|
அமைவிடம் | கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 10°14′04″N 77°29′11″E / 10.2344°N 77.4863°E |
வகை | நன்னீர் ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 24 ஹெக்டர் (60 ஏக்கர்) |
சராசரி ஆழம் | 3 மீட்டர் (9.7 அடி) |
அதிகபட்ச ஆழம் | 11 மீட்டர் (35.6 அடி) |
கரை நீளம்1 | 9 கிலோ மீட்டர் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2133 மீட்டர் (6911 அடி) |
குடியேற்றங்கள் | கொடைக்கானல் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும்.[1] 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர்.[2]
கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும்.[3] மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது. தற்போது ஏரியின் நீர் மிகவும் மாசு அடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.[4]
போக்குவரத்து வசதிகள்
[தொகு]சென்னையிலிருந்து மதுரை வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் கொடை ரோடு சந்திப்பில் நின்று செல்லும். கொடை ரோட்டிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கொடைக்கானல் செல்ல மகிழுந்து வசதிகள் உண்டு.[5] மதுரை, திண்டுக்கல், தேனி, வத்தலகுண்டு, திருச்சி மற்றும் பழனியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.[2]
இதனையும் காண்க
[தொகு]படக்காட்சிகள்
[தொகு]-
அந்தி நேரத்தில் கொடைக்கானல் ஏரி
-
இரவு நேரத்தில் கொடைக்கானல் ஏரி
-
ஏரியின் தோற்றம்
-
படகுச் சவாரி
-
படகுகள் நிறுத்துமிடம்
-
கொடைக்கானல் படகு குழுமம் மற்றும் படகோட்டுவர் சங்கம்
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sir Vere Henry Levinge 1819 - 1885. "{Sir} Vere Henry LEVINGE". Genealogy.links.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ 2.0 2.1 "Hillstation :::". Tamil Nadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
- ↑ http://dspace.iimk.ac.in/bitstream/2259/599/1/543-554.pdf பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் Managing Lake Tourism: Challenges Ahead
- ↑ "Prevent mercury pollution” பரணிடப்பட்டது 2007-11-04 at the வந்தவழி இயந்திரம், (2007-8-23)
- ↑ http://kodaicabs.com/pickup/kodai-road-to-kodaikanal/ பரணிடப்பட்டது 2015-09-18 at the வந்தவழி இயந்திரம் KODAI ROAD TO KODAIKANAL