வத்தலக்குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வத்தலகுண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வத்தலக்குண்டு (Batlagundu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது மதுரை - கொடைக்கானல் செல்லும் வழியில், மதுரையிலிருந்து 56 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கோடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,928 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.94 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.

பெயர்க் காரணம்[தொகு]

வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[2]

மண்ணின் மக்கள்[தொகு]

  • விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை, இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
  • தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதிய பி. ஆர். ராஜமய்யர் என்பவர் இங்குள்ள இரட்டைத் தெரு அக்ராஹரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
  • மணிக்கொடி இதழின் ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான பி. எசு. இராமையா.
  • எழுத்து இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சி. சு. செல்லப்பாவின் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் இவர் வளர்ந்தார்.
  • திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி
  • டாக்டர் வே விஜயன் தமிழ் மொழி தியாகி
  • தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.

கோயில்கள்[தொகு]

திருமண மண்டபங்கள்[தொகு]

  • துரை புஷ்பம் மஹால்
  • டி. எஸ். எல். மஹால்
  • வி. ஆர். மஹால்
  • வேலு மஹால்
  • ஜி. கே. மஹால்

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. வத்தலக்குண்டு பேரூராட்சியின் இணையதளம்
  2. Batlagundu Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்தலக்குண்டு&oldid=2672661" இருந்து மீள்விக்கப்பட்டது