அகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகரம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

தமிழ் எழுத்துகளில் முதன்மையானது 'அ'. அது நம் தாய்மொழியின் தனிச்சிறப்பு எனலாம். நமது தாய்மொழிக்கு மட்டுமன்று உலக மொழிகள் அனைத்திற்கும் ஒலிவடிவம் வரிவடிவம் இரண்டிலுமே முதன்மையானது அகரம் ஒலி என்பது உராய்வின்போது ஏற்படுவது. ஆனால் உராய்வின்றி இயல்பாகத் தோன்றும் ஒலி 'அ'. 'ஓம்' எனும் பிரணவத்தின் முதல் ஒலியும் அதுதான். முதல் என்பது முதன்மையை மட்டும் குறிப்பதன்று அனைத்து ஒலிகளுக்கும் ஆதார ஒலி. அவ்வொலியின் வரிவடிவான 'அ' என்ற எழுத்திலுள்ள குறியீடுகளான o ɔ _ ǀ அதாவது சுழியம், பிறைக்கோடு,நேர்கோடு.படுக்கைக் கோடு ஆகியவை உலக மொழிகள் அனைத்திற்குமான முதல் எழுத்திற்குரிய குறியீடுகளாகும். இக்குறியீடுகளைக் கொண்டு குழந்தைகளுக்கு 'அ' கரத்தைக் கற்பித்தால் ('அ' என்ற எழுத்தை) கற்றல் இயல்பாக நிகழும். 'அ' என்ற எழுத்தில் வரும் குறியீடுகளைக் கற்றுவிட்டால் எழுத்துகளை மட்டுமல்ல,வாழ்க்கையில் வரும் எவ்விதமான கடினங்களையும் எளிதாகக் கடந்து வெற்றிச் சிகரத்தைத் தொட குழந்தைகளை ஆயத்தமாக்கும் சிறப்பான வழியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்&oldid=2437059" இருந்து மீள்விக்கப்பட்டது