உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னாளப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னாளப்பட்டி
  பேரூராட்சி  
சின்னாளப்பட்டி
அமைவிடம்: சின்னாளப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°18′N 77°56′E / 10.30°N 77.93°E / 10.30; 77.93
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் ஆத்தூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

26,285 (2011)

6,185/km2 (16,019/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.25 சதுர கிலோமீட்டர்கள் (1.64 sq mi)

சின்னாளப்பட்டி (ஆங்கிலம்: Chinnalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 26,227 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 4.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. திண்டுக்கல்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி பேரூராட்சி, ஆத்தூர் - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் சின்னாளப்பட்டியில் நெய்யப்படுகின்றன. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.[3]

மக்கள்தொகை பரவல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 6,981 வீடுகளும், 26,285 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,523 மற்றும் 2 ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சின்னாளப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Chinnalapatti Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னாளப்பட்டி&oldid=4515143" இலிருந்து மீள்விக்கப்பட்டது