உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யலூர்
—  பேரூராட்சி  —
அய்யலூர்
அமைவிடம்: அய்யலூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°28′51″N 78°09′23″E / 10.4807°N 78.1563°E / 10.4807; 78.1563
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் வேடசந்தூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

• அடர்த்தி

17,100 (2011)

• 814/km2 (2,108/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ayyalur

அய்யலூர் (ஆங்கிலம்: Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்சி 21 ச.கி.மீ. பரப்பும், 2011-இல் 17,100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளன. அய்யலூர் பேரூராட்சி, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது மற்றும் இதனைச் சுற்றியுள்ள முக்கியமான ஊர்களான தீத்தாக்கிழவனூர், கலர்பட்டி வெங்கனூர், குளத்துப்பட்டி, கெங்கையூர், பூசாரிப்பட்டி, குரும்பப்பட்டி, சுக்காம்பட்டி, மாமரத்துப்பட்டி கிணத்துப்பட்டி, குருந்தம்பட்டி, புத்தூர் புதுப்பட்டி, கோம்பை ஆகிய முக்கியமான ஊர்களை உள்ளடக்கியது அய்யலூர் பேரூராட்சி ஆகும்.[4]

அமைவிடம்

[தொகு]

திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ.; வேடசந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. மற்றும் அய்யலூர் சுற்றிலும் மலைகள் மற்றும் அனைத்து இடங்களும் இயற்கை சூழ்ந்து காணப்படுவதால் விஜயகாந்த், ராஜ்கிரண், முரளி, கைதி படம் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் போன்ற நடிகர்களின் சில படங்கள் இங்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இங்கே சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிறிட்டு அதனை இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்வதனால் புகழ் பெற்ற அய்யலூர் தக்காளி என்ற தனி பெயர் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு புகழ்பெற்ற அய்யலூர் ஆட்டு சந்தையும் இங்கே இருப்பதால் மேலும் புகழ்பெற்று காணப்படுகிறது, உலகிலேயே முதல் தேவாங்கு சரணாலயமும் இங்கு தான் முதன் முதலில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

21 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.


இங்கேதான் உலகிலயே முதல் தேவாங்கு சரணாலயம் அமைந்து உள்ளது, இது கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் இணைந்து அமைத்துள்ளது தற்போது வண்டிக்காருப்பானாசாமி கோவில் அருகே எதிர் புறம் உள்ள மலையில் தேவாங்கு சரணாலயம் பார்வையிடம் அமைந்து உள்ளது


மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 61.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. ↑ Ayyalur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யலூர்&oldid=4566382" இலிருந்து மீள்விக்கப்பட்டது