வேடசந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேடசந்தூர்
—  பேரூராட்சி  —
வேடசந்தூர்
இருப்பிடம்: வேடசந்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95ஆள்கூற்று: 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் T.G வினய் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 10,944 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


219 metres (719 ft)

வேடசந்தூர் (ஆங்கிலம்:Vedasandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள எரியோடு ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,500 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

பெயர்க்காரணம்[தொகு]

அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதல் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வேடசந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடசந்தூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. வேசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. "Vedasandur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடசந்தூர்&oldid=2672657" இருந்து மீள்விக்கப்பட்டது