நிலக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிலக்கோட்டை
—  பேரூராட்சி  —
நிலக்கோட்டை
இருப்பிடம்: நிலக்கோட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°10′N 77°52′E / 10.17°N 77.87°E / 10.17; 77.87ஆள்கூறுகள்: 10°10′N 77°52′E / 10.17°N 77.87°E / 10.17; 77.87
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு T N ஹரிஹரன் இ.ஆ.ப [3]
சட்டமன்றத் தொகுதி நிலக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

பு.த (இராஜாங்கம்)

மக்கள் தொகை 19,630 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


320 மீற்றர்கள் (1,050 ft)

நிலக்கோட்டை (ஆங்கிலம்:Nilakkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாறு[தொகு]

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் சிந்தமநாயக்கர்.[4]

கூலப்பாநாயக்கர் வரலாறு[தொகு]

17-ம் நூற்றாண்டின் நிலக்கோட்டை ஆண்டவர் கூளப்ப நாயக்கர். மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர்களில் ­ ஒருவர். வடக்கில் திண்டுக்கல்லில் ­ இருந்து மேற்கில் சித்தையன்கோட்டை ­ வரை 108 கிராமங்கள் இவர் வசம் இருந்தன.நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தமநாயக்கரின் மகன் கூலப்பாநாயக்கர் இவருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் பிரசித்துபெற்றவையாம் இது சந்தா சாகிப்பின் கெஜட்டில் உள்ளது இவர் திண்டுக்கல்லின் ஆளுநராக இறுந்துள்ளார். நிலக்கோட்டையில் உள்ள நரசிங்க பெருமால் கோவிலை கட்டியவர் பாளையக்காரர் கூலப்பாநாயக்கர் .[4]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°10′N 77°52′E / 10.17°N 77.87°E / 10.17; 77.87 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 மீட்டர் (1049 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நிலக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நிலக்கோட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. 4.0 4.1 "Nilakkottai". History. பார்த்த நாள் may 20, 2014.
  5. "Nilakkottai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கோட்டை&oldid=1662926" இருந்து மீள்விக்கப்பட்டது