கன்னிவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னிவாடி
கன்னிவாடி
இருப்பிடம்: கன்னிவாடி
,
அமைவிடம் 10°22′44″N 77°49′48″E / 10.379°N 77.830°E / 10.379; 77.830ஆள்கூற்று: 10°22′44″N 77°49′48″E / 10.379°N 77.830°E / 10.379; 77.830
நாடு  இந்தியா
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் திண்டுக்கல் மேற்கு
மக்களவைத் தொகுதி கன்னிவாடி
மக்கள் தொகை

அடர்த்தி

10,369 (2011)

586/km2 (1,518/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.70 சதுர கிலோமீட்டர்கள் (6.83 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kannivadi-dindugal

கன்னிவாடி (ஆங்கிலம்:Kannivadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி, 17.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்டது. இது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,746 வீடுகளும், 10,369 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 994 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,228 மற்றும் 14 ஆகவுள்ளனர்.[2]

வழிபாட்டுத்  தலங்கள்[தொகு]

அருகில் உள்ள மலைக்குகை கோவிலான சோமலிங்க சுவாமி கோவில் இந்த ஊரில் காணவேண்டிய முக்கியமான தளமாகும்.  கோபிநாத சுவாமி மலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் . இது கன்னிவாடிக்கு மிக அருகில் உள்ள முத்துரன்பட்டி என்று கிராமத்தில் அமைந்துள்ளது 

ஆதாரங்கள்[தொகு]

  1. கன்னிவாடி பேரூராட்சியின் இணையதளம்
  2. Kannivadi Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிவாடி&oldid=2742116" இருந்து மீள்விக்கப்பட்டது