சேவுகம்பட்டி

ஆள்கூறுகள்: 10°09′45″N 77°43′44″E / 10.1625633°N 77.7289234°E / 10.1625633; 77.7289234
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவுகம்பட்டி (ஆங்கிலம்:Sevugampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது. வத்தலக்குண்டுதாண்டிக்குடி வழியாக செல்லும் சாலையில் உள்ள மு.வாடிப்பட்டியில், சேவுகம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. [1]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 10.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

சேவுகம்பட்டி
சேவுகம்பட்டி
இருப்பிடம்: சேவுகம்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°09′45″N 77°43′44″E / 10.1625633°N 77.7289234°E / 10.1625633; 77.7289234
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் எஸ். விசாகன், இ. ஆ. ப [4]
மக்கள் தொகை 11,718 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://www.townpanchayat.in/Sevugampatti


மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,037 வீடுகளும், 11,730 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,822 மற்றும் 3 ஆகவுள்ளனர்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. சேவுகம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Sevugampatti Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவுகம்பட்டி&oldid=2817581" இருந்து மீள்விக்கப்பட்டது