உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீராமபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீராமபுரம் (ஆங்கிலம்:Sriramapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மதுரை - ஒட்டன்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகே 15 கிமீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இதன் கிழக்கே திண்டுக்கல்லும், மேற்கே பழனியும், வடக்கே ஒட்டன்சத்திரமும், தெற்கே செம்பட்டியும் எல்லைகளாக உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,653 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 16.89 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,892 வீடுகளும், 10,653 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 70.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,016 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,470 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. ஸ்ரீராமபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  2. Sriramapuram Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராமபுரம்&oldid=2710446" இலிருந்து மீள்விக்கப்பட்டது