சிறுமலை
சிறுமலை | |
---|---|
சிறுமலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,600 m (5,200 அடி) |
பெயரிடுதல் | |
பெயரின் மொழி | தமிழ் |
புவியியல் | |
அமைவிடம் | திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
மூலத் தொடர் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர்கள் (16 mi) அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன.[1] இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது.[2] ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. மற்றும் புராணங்களில் கூறப்படும் அனுமன் இமயமலையை கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்று வலதுபுறம் செல்லவேண்டும். மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செல்லும் வழியில் மலைமாதா கோவில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன. இங்கு எப்போதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமலை வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
தமிழ் இலக்கியத்தில் சிறுமலை
[தொகு]" வாழையும் கமுகும் தாழ்தலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"
சிலப்பதிகாரம் காடுகாண் காதை 53-55
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Low profile heat buster". The Hindu (Chennai, India). 2004-05-22 இம் மூலத்தில் இருந்து 2004-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040707075836/http://www.hindu.com/mp/2004/05/22/stories/2004052200010100.htm. பார்த்த நாள்: 2009-11-14.
- ↑ "Location". hillockinternationalschool.com. Archived from the original on 2009-08-11. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
- தமிழ்நாடு அரசின் பாடநூல்கள்[1]
வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.