ஆயக்குடி
ஆயக்குடி | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
வட்டம் | பழனி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | எஸ். விசாகன், இ. ஆ. ப [3] | ||
பேரூராட்சித் தலைவர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
27,156 (2011[update]) • 480/km2 (1,243/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
56.56 சதுர கிலோமீட்டர்கள் (21.84 sq mi) • 320 மீட்டர்கள் (1,050 ft) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/ayakudi |
ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.[4] இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [5]
அமைவிடம்[தொகு]
திண்டுக்கல் - பழநி சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 64 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர். [7]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.
முக்கிய பயிர்[தொகு]
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு.
ஆயக்குடி இலவச பயிற்சி மையம்[தொகு]
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற இந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,இதை விட ஒரு முக்கியமான செய்தி கடந்த மாதம் 07.03
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஆயக்குடி பேரூராட்சி
- ↑ ஆயக்குடி கல்திட்டைகள்
- ↑ ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ayakudi Population Census 2011
- ↑ "Ayakkudi". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.