ஆயக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆயக்குடி
—  பேரூராட்சி  —
ஆயக்குடி
இருப்பிடம்: ஆயக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424ஆள்கூற்று: 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் டி. என். ஹரிஹரன் இ. ஆ. ப. [3]
பேரூராட்சித் தலைவர் P. K. சுந்தரம்
மக்கள் தொகை 23,410 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


320 metres (1,050 ft)

ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர் [4][5].

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E / 10.26; 77.33 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,410 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆயக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆயக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய பயிர்[தொகு]

இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும்.

ஆயக்குடி இலவச பயிற்சி மையம்[தொகு]

இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற இந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,இதை விட ஒரு முக்கியமான செய்தி கடந்த மாதம் 07.03

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=13
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0001&tlkname=Palani#MAP
  6. "Ayakkudi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயக்குடி&oldid=2133658" இருந்து மீள்விக்கப்பட்டது