தாடிக்கொம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாடிக்கொம்பு
பேரூராட்சி
சௌந்தரராஜப் பெருமாள் கோயில் கோபுரம்
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில்
தாடிக்கொம்பு is located in தமிழ் நாடு
தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு
ஆள்கூறுகள்: 10°27′59″N 77°59′23″E / 10.46639°N 77.98972°E / 10.46639; 77.98972ஆள்கூறுகள்: 10°27′59″N 77°59′23″E / 10.46639°N 77.98972°E / 10.46639; 77.98972
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,838
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம (ஒசநே+5:30)
இணையதளம்www.townpanchayat.in/thadicombu

தாடிக்கொம்பு (ஆங்கிலம்:Thadikombu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் சௌந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது.....மற்றும் மறவபட்டியில் பல புதுமைகள் விளங்கும் *சந்தியாகப்பர் திருத்தலம்* உள்ளது .

அமைவிடம்[தொகு]

தாடிக்கொம்பு பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அகரம் பேரூராட்சி 3 கிமீ; வடக்கில் வேடசந்தூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,777 வீடுகளும், 18,838 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022. பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,203 மற்றும் 0 ஆகவுள்ளனர். [2]

பெயர்க்காரணம்[தொகு]

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் உருவான பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. தாடி என்றால் பனைமரம் , கும்பு  என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு தாடிக்கொம்பு எனப்பெயராயிற்று. தாடி  கும்ப்பு (பனைமரக்கூட்டம்) என்பது மருவி தாடிக்கொம்பு என்றாகியது. மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயநகர பேரரசின் அச்சுதேவராயரால் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .

ஆதாரங்கள்[தொகு]

  1. தாடிக்கொம்பு பேரூராட்சியின் இணையதளம்
  2. Thadikombu Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடிக்கொம்பு&oldid=3396611" இருந்து மீள்விக்கப்பட்டது