உள்ளடக்கத்துக்குச் செல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 10°09′49″N 77°43′56″E / 10.1635467°N 77.7323274°E / 10.1635467; 77.7323274
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வத்தலகுண்டு
வத்தலகுண்டு
அமைவிடம்: வத்தலகுண்டு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°09′49″N 77°43′56″E / 10.1635467°N 77.7323274°E / 10.1635467; 77.7323274
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சரவணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 22,938 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://http://www.townpanchayat.in/vathalagundu


வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் (VATHALAGUNDU PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இதன் தலைமையிடம் வத்தலகுண்டு நகரத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,449 ஆகும். அதில் ஆண்கள் 39,418 ; பெண்கள் 38,031 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,130 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,399; பெண்கள் 10,731 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 481ஆக உள்ளது. அதில் ஆண்கள் 247; பெண்கள் 234 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. விருவீடு
  2. விராலிமாயன்பட்டி
  3. செங்கட்டாம்பட்டி
  4. செக்காபட்டி
  5. சந்தையூர்
  6. ரெங்கப்பநாயக்கன்பட்டி
  7. பி. விராலிபட்டி
  8. பழைய வத்தலக்குண்டு
  9. நடகோட்டை
  10. மல்லனம்பட்டி
  11. குன்னுவாரன்கோட்டை
  12. கோட்டைப்பட்டி
  13. கோம்பைப்பட்டி
  14. கட்டகாமன்பட்டி
  15. கணவாய்பட்டி
  16. ஜி. தும்மலப்பட்டி
  17. எழுவனம்பட்டி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்