தாடிக்கொம்பு

ஆள்கூறுகள்: 10°27′59″N 77°59′23″E / 10.46639°N 77.98972°E / 10.46639; 77.98972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாடிக்கொம்பு
பேரூராட்சி
சௌந்தரராஜ பெருமாள் கோயில் கோபுரம்
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்
தாடிக்கொம்பு is located in தமிழ் நாடு
தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு
ஆள்கூறுகள்: 10°27′59″N 77°59′23″E / 10.46639°N 77.98972°E / 10.46639; 77.98972
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,838
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.townpanchayat.in/thadicombu

தாடிக்கொம்பு (ஆங்கிலம்:Thadikombu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் சௌந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மற்றும் மறவப்பட்டியில் *சந்தியாகப்பர் திருத்தலம்* உள்ளது.

அமைவிடம்[தொகு]

தாடிக்கொம்பு பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அகரம் பேரூராட்சி 3 கிமீ; வடக்கில் வேடசந்தூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,777 வீடுகளும், 18,838 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022. பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,203 மற்றும் 0 ஆகவுள்ளனர். [2]

பெயர்க்காரணம்[தொகு]

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் உருவான பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. தாடி என்றால் பனைமரம் , கும்பு என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு தாடிக்கொம்பு எனப்பெயராயிற்று. தாடி கும்ப்பு (பனைமரக்கூட்டம்) என்பது மருவி தாடிக்கொம்பு என்றாகியது. மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயநகர பேரரசின் அச்சுதேவராயரால் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .

ஆதாரங்கள்[தொகு]

  1. தாடிக்கொம்பு பேரூராட்சியின் இணையதளம்
  2. Thadikombu Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடிக்கொம்பு&oldid=3746948" இலிருந்து மீள்விக்கப்பட்டது