வத்தலக்குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வத்தலக்குண்டு நகரம்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
தலைவர் வெற்றிடம்
மக்கள் தொகை 32,577 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வத்தலக்குண்டு (Batlagundu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.

பெயர்க் காரணம்[தொகு]

வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. எனினும் போதிய ஆதாரமில்லை.

சிறப்புகள்[தொகு]

அருவியிலும் குளிப்போம்... ஆற்றிலும் குளிப்போம்! 'இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று வர்ணிக்கப்படும் கொடைக் கானலின் மலை அடிவாரத்தில் இருக்கிறது வத்தலக்குண்டு. அதனால்தான் என்னவோ கொடைக்கானலின் குளிர்ச்சியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சாரலும் வத்தலக்குண்டில் எப்போதும் இருக்கும் வத்தலக்குண்டு பற்றிப் பேசும்போதே வார்த்தைகளில் குளுமை வந்து ஒட்டிக்கொள்கிறது.

கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் செல்லும் பயணிகள் ஒரு பக்கம், சபரிமலைக்குப் போய் வரும் பக்தர்கள் மறுபக்கம் என்று வருடம் முழுவதும் வத்தலக்குண்டு பிஸியாகவே இருக்கும். தேனி, பெரியகுளம், கேரளா செல்லும் வாக னங்கள் எல்லாமே எங்கள் ஊரைக் கடந்துதான் போக வேண்டும் என்பதால் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் தினமும் திருவிழாதான். ஊருக்கு நடுவே உள்ள விசாலாட்சிக் கோயில், கொஞ்சம் தள்ளியிருக்கும் மயில் விநாயகர் கோயில், ஆத்தோரப் பெருமாள் கோயில், அக்ரஹாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் எல்லாமே ஆன்மிகத்தின் அடையாளங்கள்.

வத்தலக்குண்டை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

ள். எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா போன்றவர்கள் வத்தலக் குண்டின் மைந்தர்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு தேசப்பற்று அதிகம். விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல; இந்திய ராணுவத்திலும் பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். விமானப் படையின் வைஸ் மார்ஷல் ராஜாராம், உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சோமசுந்தரம், நீதிபதிகள் பி.எஸ். சிவகுருநாதன், ராஜாராம் என்று எங்கள் ஊரின் ஆளுமைகளைப் பட்டியலே போடலாம். கோயில் திருவிழாக்களும் நடைபெறும். திரு விழாவின்போது, ஊரின் மைதானத்தின் மேடையில் நாடகம், பாட்டுக் கச்சேரி என்று ஒரு வாரத்துக்கும் மேல் ஊரே அல்லோலகல் லோலப்படும். பகல்பொழுதில் அருகில் இருக்கிற குமுளி அருவிக்குப் போய்க் கொட்டும் தண்ணீரில் தலையைக்கொடுத்து நின்றுவிட்டு அப்படியே மூன்று ஆறுகள் சங்கமிக்கின்ற கூட்டாத்தான் ஐயம்பாளையம் என்ற இடத்தில் களைப்புத் தீர இன்னொரு குளியல் போடுவதும் ஆனந்தம். முன்னது அருவி. பின்னது ஆறு.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,007 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வத்தலகுண்டு மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வத்தலக்குண்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மண்ணின் மக்கள்[தொகு]

 • விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா. பேருந்து நிலையத்திற்கு இவரது பெயரை வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
 • எழுத்து இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சி. சு. செல்லப்பா. இது இவர்தம் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் அவர் வளர்ந்தார்.
 • தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.

கோயில்கள்[தொகு]

திருமண மண்டபங்கள்[தொகு]

 • துரை புஷ்பம் மஹால்
 • டிஎஸ்எல் மஹால்
 • வி ஆர் மஹால்
 • வேலு மஹால்
 • ஜி கே மஹால்
 • ஶ்ரீ கணேஷ் மஹால்

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்தலக்குண்டு&oldid=2491582" இருந்து மீள்விக்கப்பட்டது