பேச்சு:வத்தலக்குண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வத்தலக்குண்டு கட்டுரையில் வத்தலக்குண்டு செய்திகள் இருந்தால் பரவாயில்லை. வத்தலக்குண்டுக்கு பக்கத்திலுள்ள ஊரின் செய்தி இறை வழிபாட்டுத் தலங்கள் எனும் பெயரில் தனித்தலைப்பாக இங்கு இடம் பெறுவது தேவையற்றது. இதை நீக்கலாம். கண்ணாப்பட்டி எனும் ஊருக்குச் சிறப்புகள் இருப்பின் அதைத் தனித்தலைப்பில் கட்டுரையாக்கலாம். பழைய வத்தலக்குண்டிலுள்ள சென்றாயப் பெருமாள் கோயில் குறித்த தகவலை இங்கு இணைத்தால் நல்லது. --Theni.M.Subramani 14:44, 14 ஏப்ரல் 2010 (UTC)

வத்தலக்குண்டு கோயில்களை மட்டும் இணைக்கலாம்[தொகு]

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி நிலையிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊரிலுள்ள கோயில்களை மட்டும் இங்கு சேர்க்கலாம். வத்தலக்குண்டுக்கு வெளியே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணாபட்டி எனும் ஊரிலுள்ள குன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் குறித்த தகவல் வத்தலக்குண்டு கட்டுரையில் இடம் பெறுவது சரியல்ல. கண்ணாபட்டி எந்த ஊராட்சி ஒன்றையத்தின் கீழ் வருகிறதோ அந்த ஊராட்சி ஒன்றியத்திற்கான கட்டுரை இருந்தால் அதில் கோயில்கள் எனத் தலைப்பிட்டு சேர்க்கலாம். மேலும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி நிலையிலுள்ள தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பேரூராட்சியிலுள்ள தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் குறித்த குறிப்பும் வத்தலக்குண்டு கட்டுரையில் இடம்பெறுவது சரியல்ல. எனவே இக்கோயில் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. --Theni.M.Subramani 08:33, 17 ஏப்ரல் 2010 (UTC)

அக்கோயிலுக்கான இணைப்பை “இவற்றையும் பார்க்க” என்ற உப தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:40, 17 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வத்தலக்குண்டு&oldid=511265" இலிருந்து மீள்விக்கப்பட்டது