எழுத்து (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழுத்து 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா ஆவார். இது இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி, இலக்கு வழுவாது நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது.

எழுத்து இதழை 1959 சனவரி மாதம் சி. சு. செல்லப்பா தோற்றுவித்தார். புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது. இவ்விதழில் ந. பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமணியன், தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைசுவாமி, பசுவய்யா, எஸ். வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, சி. மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர். 1962ஆம் ஆண்டு 24 கவிஞர்களின் 63 கவிதைகளைத் தொகுத்து, புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி. சு. செல்லப்பா வெளியிட்டார். 119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது. எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலகட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_(இதழ்)&oldid=2761525" இருந்து மீள்விக்கப்பட்டது