மலட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலட்டாறு (Malatar River) தமிழகத்தின் விழுப்புரம் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகிய இது அதனுடன் சேர்ந்து வங்கக்கடலில் கலக்கிறது, இது ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாகும். வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பால் இந்த ஆறு, நீர் வரத்தின்றி, பாலைவனமாக மாறிவருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டாறு&oldid=2582447" இருந்து மீள்விக்கப்பட்டது