சிங்காநல்லூர் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிங்காநல்லூர் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிங்காநல்லூர் ஏரியில் பறவைகள்

சிங்காநல்லூர் குளம் என்றழைக்கப்படும் சிங்காநல்லூர் ஏரி தமிழகத்தின் கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இக்குளம் கோவையின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நீர்க்காக்கை, நாமக்கோழி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் கூழைக்கடாப் பறவைகளும் வருகின்றன. 110-க்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது[1].

நொய்யல் ஆறு இதன் நீராதாரமாக விளங்குகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளத்தை ஒட்டிச் செல்கிறது. மேலும் போத்தனூர்-இருகூர் இருப்புப் பாதை குளத்தின் நடுவில் செல்கிறது. இக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தலும் நடைபெறும்.

2005-ஆம் ஆண்டளவில் இங்கு படகு இல்லம் ஒன்றும் செயல்பட்டு வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Birds of Singanallur Lake, Coimbatore, Tamil Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காநல்லூர்_குளம்&oldid=1402145" இருந்து மீள்விக்கப்பட்டது