மூக்கனேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூக்கனேரி
அமைவிடம் சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
வகை நீர்த்தேக்கம்
வடிநில நாடுகள் இந்தியா
Surface area 58 acres (0.23 km2)

மூக்கனேரி எனப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.

அமைவிடம்[தொகு]

இந்த நீர்த்தேக்கம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி ஊராட்சியில் அமைந்துள்ளது. சேலத்தில் உள்ள பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்;சேர்வராயன் மலையடிவாரத்தில் தொடங்கும் இந்த நீர்நிலை 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் அடி³ (93 மில்லியன் மீ³).


பறவைகள் சரணாலயம்[தொகு]

"சேலம் குடிமக்கள் குழு"வைச் சார்ந்த "பியூசு மானுசு" போன்ற சுற்றுச்சூழல் ஆர்வாளர்களால் இந்த ஏரியின் நடுவே பல தனித் தீவுகள் ஏற்படுத்தப்பட்டு மரங்கள் நடப்பட்டு பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏரிப்பூங்கா ஓர் சுற்றுலா இடமாக விளங்குகிறது.


வெளியிணைப்புக்கள்[தொகு]

மூக்கனேரி

பறவைகள் சரணாலயம்


மேலும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனேரி&oldid=2438635" இருந்து மீள்விக்கப்பட்டது