தி நியூஸ் மினிட்
துவங்கப்பட்டது | 2014 |
---|---|
துவங்கியவர் | சித்ரா சுப்ரமணியம், தன்யா ராஜேந்திரன், விக்னேஷ் வேலூர் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | பெங்களூரு |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் | www |
தி நியூஸ் மினிட் (ஆங்கில மொழி : The News Minute) என்பது கர்நாடகாவின் பெங்களூரை தலைமையகமாக கொண்ட ஒரு இந்திய இணைய செய்தி தளமாகும். இது தன்யா ராஜேந்திரன், சித்ரா சுப்ரமணியம் மற்றும் விக்னேஷ் வேலூர் ஆகியோரால் 2014 இல் நிறுவப்பட்டது. கர்நாடகா தவிர, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் பணியகங்களைக் கொண்டுள்ளது. [1]
வரலாறு
[தொகு]2015 டிசம்பரில் மின்ட் நிறுவனத்தின் சாதனா சதுர்வேதுலாவுடனான நேர்காணலில் நிறுவனர் விக்னேஷ் வேலூர் அவர்கள், தி நியூஸ் மினிட் தற்போது 12 பேரை பணியமர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ராகவ் பாலின் நிறுவனத்திடம் இருந்து ஒரு வெளியிடப்படாத தொகையை நிதியுதவியாக தி நியூஸ் மினிட் பெற்றுள்ளது. 2019இல் மேலும் ஒரு வெளியிடப்படாத தொகையை பெற்றது. நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களை பணியமர்த்தவும், நிறுவனத்தை விரிவுபடுத்தவும் அந்த நிதியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [2] "நாங்கள் வெளியிடும் உள்ளடக்கத்தில் பார்வையாளர்களை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்க, பயனர் இடைமுகத்தை (UI) செழுமைப்படுத்துவதை தி நியூஸ் மினிட் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று விக்னேஷ் கூறினார். [3]
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- சித்ரா சுப்ரமணியம் — தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் , போஃபர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணைகளுக்காக அறியப்பட்டவர். அவர்ரிபப்ளிக்தொலைக்காட்சியின் எடிட்டோரியல் ஆலோசகராகவும் உள்ளார். [4]
- ↑ "About Us". The News Minute. https://www.thenewsminute.com/node/35.
- ↑ Chathurvedula, Sadhana (18 December 2015). "The News Minute raises angel funding from Quintillion Media". Mint. http://www.livemint.com/Consumer/5hunech9v9EwUy56pQChpO/The-News-Minute-raises-angel-funding-from-Quintillion-Media.html.
- ↑ Vikas, S. N. (18 December 2015). "The News Minute secures angel funding from Quintillion Media". தி எகனாமிக் டைம்ஸ். http://tech.economictimes.indiatimes.com/news/internet/the-news-minute-secures-angel-funding-from-quintillion-media/50229601.
- ↑ "Chitra Subramaniam joins Republic TV". Rediff.com. 31 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.